தமிழ் மழை யின் அர்த்தம்

மழை

பெயர்ச்சொல்

 • 1

  மேகங்களிலிருந்து துளிகளாகப் பூமியின் மீது விழும் நீர்.

  ‘காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக மழையின் அளவு வருடாவருடம் குறைந்துகொண்டேவருகிறது’

 • 2

  ஒன்று தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் நிகழ்வதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘அமெரிக்க விமானங்கள் ஈராக் மீது குண்டுமழை பொழிந்தன’
  ‘குழந்தையின் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிந்தாள்’