தமிழ் மாசு யின் அர்த்தம்

மாசு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருளிலிருந்து நீக்கப்பட வேண்டியதாக இருப்பது அல்லது தூய்மையைக் கெடுக்கும் வகையில் ஒன்றில் சேர்வது.

  ‘தங்கத்தில் உள்ள மாசை அகற்றப் புடம்போடுகிறார்கள்’
  ‘நிலத்தடி நீரில் பல்வேறு மாசுகள் கலந்துள்ளதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது’
  ‘வடிதாளைக் கொண்டு இந்தக் கரைசலிலிருக்கும் மாசுகளை நீக்கிவிடலாம்’

 • 2

  நீர், காற்று முதலியவற்றின் தூய்மையற்ற தன்மை; தூய்மைக்கேடு.

  ‘தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் மாசடைகிறது’
  ‘காற்று மண்டலம் மாசுபடாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன’

 • 3

  (புகழ், நடத்தை போன்றவற்றுக்கு ஏற்படும்) களங்கம்.

  ‘அவருடைய நற்பெயருக்கு மாசு ஏற்பட்டுள்ளது’
  ‘நமது கட்சியின் நோக்கத்துக்கு மாசு கற்பிக்க முயல்பவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்’