தமிழ் மாட்டு யின் அர்த்தம்

மாட்டு

வினைச்சொல்மாட்ட, மாட்டி, மாட்டேன், மாட்டாய், மாட்டான், மாட்டாது, மாட்டாமல் போன்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  (செருகுதல், நுழைத்தல், திருகுதல் முதலியவற்றின் மூலமாக ஒன்றை மற்றொன்றில்) பொருத்துதல்.

  ‘ஆணியில் படத்தை மாட்டு!’
  ‘கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டார்’
  ‘சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார்’
  ‘மூக்குத்தியைக்கூட மாட்டத் தெரியாதா?’

 • 2

  (துளை, இடுக்கு முதலியவற்றில் அல்லது மற்றொன்றின் அடியிலிருந்து) வெளிவர இயலாத நிலைக்கு உள்ளாதல்; சிக்குதல்.

  ‘பல் இடுக்கில் என்னவோ மாட்டிக்கொண்டுவிட்டது’
  ‘முள்ளில் புடவை மாட்டிக்கொண்டுவிட்டது’

 • 3

  (இக்கட்டான சூழலில்) விடுபட முடியாதபடி ஆதல்; அகப்படுதல்; சிக்குதல்.

  ‘திருடன் வசமாகக் காவலாளியிடம் மாட்டிக்கொண்டான்’
  ‘என்னை வம்பில் மாட்டிவிடாதே!’

தமிழ் மாட்டு யின் அர்த்தம்

மாட்டு

வினைச்சொல்மாட்ட, மாட்டி, மாட்டேன், மாட்டாய், மாட்டான், மாட்டாது, மாட்டாமல் போன்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  எதிர்மறைப் பொருளை உணர்த்த ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை அடுத்து வரும் வினை.

  ‘‘நீ நாளை வருவாயா?’ ‘வர மாட்டேன்’’
  ‘‘நிர்வாகத்தோடு ஒத்துழைக்க மாட்டோம்’ என்று தொழிலாளர்கள் கூறிவிட்டார்கள்’
  ‘நான் சொன்னால் நீ கேட்க மாட்டாய்’
  ‘அவர்கள் கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்’
  ‘ரூபாயின் மதிப்புக் குறைக்கப்பட மாட்டாது’
  ‘பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்க மாட்டாமல் இந்த நகரம் திணறுகிறது’
  ‘அவர் பசி தாங்க மாட்டார்’
  ‘அவர் இரண்டடி எடுத்து வைத்திருக்க மாட்டார். அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்’