தமிழ் மாத்திரம் யின் அர்த்தம்

மாத்திரம்

இடைச்சொல்

  • 1

    ‘மட்டும்’ என்பதன் (ஐந்தாவது பொருள் தவிர்த்து) எல்லாப் பொருளிலும் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    see மட்டும் (except sense 5).

  • 2

    (‘எம்மாத்திரம்’, ‘எந்த மாத்திரம்’ என்ற தொடர்களில்) ஒன்றுடனோ ஒருவருடனோ ஒப்பிடும்போது ‘குறிப்பிடப்படுவதன் அல்லது குறிப்பிடப்படுபவரின் நிலை, அளவு போன்றவை மிகவும் சாதாரணம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘(எந்த) மூலைக்கு’.

    ‘பெரிய பெரிய முதலாளிகளாலேயே இந்தத் தொழிலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம்’