மாதிரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாதிரி1மாதிரி2

மாதிரி1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தினுசு; ரகம்.

  ‘புது மாதிரியாக இந்த மேஜையைச் செய்திருக்கிறார்’

 • 2

  ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி.

  ‘மாதிரிக்கு ஒன்று தாருங்கள்’
  ‘மண்ணைச் சோதிக்க மாதிரி எடுத்துச் சென்றார்கள்’
  ‘குளிர்பானங்களின் மாதிரிகளைப் பரிசோதித்து அவற்றின் தரம்குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்’

 • 3

  (ஒருவரை அல்லது ஒன்றைப் போலவே இருக்கும்) ஒத்த வடிவம் அல்லது அமைப்பு.

  ‘மாதிரி வினாத்தாள்’
  ‘பல்கலைக்கழகக் கட்டட மாதிரி’

மாதிரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாதிரி1மாதிரி2

மாதிரி2

இடைச்சொல்

 • 1

  (பெயரெச்சத்தின் பின் வரும்போது) ஒன்றை அல்லது ஒருவரை ஒத்த நிலையில் மற்றொன்று அல்லது மற்றொருவர் இருப்பதைக் காட்ட இணைக்கப்படும் இடைச்சொல்; ‘போல்’; ‘போல’.

  ‘இரவு குழந்தை அழுகிற மாதிரி இருந்தது. எழுந்து பார்த்தால் பூனைதான் அப்படிக் கத்தியிருக்கிறது!’
  ‘இதைத் தெரிந்துகொண்டால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட மாதிரிதான்’