தமிழ் மானசீகம் யின் அர்த்தம்

மானசீகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவருடன் கொண்டுள்ள தொடர்பு, உறவு போன்றவற்றைக் குறித்து வரும்போது) நேரடியாகவோ, நடைமுறையைச் சார்ந்ததாகவோ அல்லாமல் மனத்தளவில் ஈடுபாடு காட்டும் நிலை; அத்தகைய ஈடுபாட்டுடன் ஒன்றைச் செய்யும் நிலை.

    ‘நண்பர் பிழைக்க வேண்டும் என்று மானசீகமாக இறைவனை வேண்டினார்’
    ‘துரோணரை மானசீக குருவாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்றான்’
    ‘அவரை முன்பின் பார்த்திருக்காவிட்டாலும் எங்களுக்குள் ஒரு மானசீகமான நெருக்கத்தை நான் உணர்ந்தேன்’