தமிழ் மானம் யின் அர்த்தம்

மானம்

பெயர்ச்சொல்

 • 1

  சுயகௌரவத்தின் அடிப்படையில் ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் அல்லது பிறர் மத்தியில் தனக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மதிப்பும் கௌரவமும்.

  ‘மானமுள்ள எவனும் இப்படியொரு காரியத்தைச் செய்ய மாட்டான்’
  ‘மானம் மரியாதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ வேண்டுமா?’
  ‘மானம் கெட்டுப்போய் வந்திருக்கிறாயே!’
  ‘உன்னால் என் மானம் போயிற்று. இனிமேல் வீட்டுப் பக்கம் வராதே என்று தன் தம்பியைத் திட்டினார்’