தமிழ் மானியம் யின் அர்த்தம்

மானியம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருள் கட்டுப்படியாகும் விலையில் நுகர்வோருக்கு (குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு) கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை.

  ‘யூரியாவுக்குத் தரும் மானியத்தைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை’

 • 2

  குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி.

  ‘வேலையற்ற பட்டதாரிகள் தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது’

 • 3

  (தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும்) உதவித்தொகை.

  ‘அந்தப் பள்ளிக்கூடம் அரசு மானியம் பெறுகிறது’
  ‘பல்கலைக்கழக மானியக் குழு’

 • 4

  (முற்காலத்தில் கோயில் போன்ற அறநிலையங்களுக்கு அரசர்களால் அல்லது தனியாரால்) சொத்தாகவோ பொருளாகவோ அளிக்கப்பட்ட தர்மம்.

  ‘கோயிலில் விளக்கு எரிப்பதற்காக நிலம் மானியமாக அளிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது’

 • 5

  சுதந்திர இந்திய நாட்டுடன் முன்னாள் சமஸ்தானங்கள் இணைந்தபோது சமஸ்தான அதிபர்களுக்கு ஈடுகட்டும் வகையில் இந்திய அரசு சில காலம் வழங்கிய தொகை.