தமிழ் மாமூல் யின் அர்த்தம்

மாமூல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பிடும்போது) சகஜம்; இயல்பு.

  ‘பதற்றம் ஏற்பட்ட நகரங்களில் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது’

 • 2

  பேச்சு வழக்கு (செயல், நிகழ்ச்சி முதலியவற்றைக் குறிப்பிடும்போது) வழக்கம்.

  ‘மாமூலாக என்னிடம் காய்கறி வாங்குபவர்’
  ‘மாமூலான இடத்திலேயே நாளை சந்திப்போம்’
  ‘நாட்டைத் தீவிரவாதிகளிடமிருந்து கதாநாயகன் காப்பாற்றுவது போன்ற மாமூலான கதை’

 • 3

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் வழக்கமாகத் தரும்) லஞ்சம்.

  ‘அந்த அலுவலகத்தில் மாமூல் கொடுத்தால்தான் காரியம் நடக்கும்’