தமிழ் மாய் யின் அர்த்தம்

மாய்

வினைச்சொல்மாய, மாய்ந்து, மாய்க்க, மாய்த்து

 • 1

  உயர் வழக்கு (விபத்து, போர் முதலியவை காரணமாக) இறத்தல்; உயிர்விடுதல்.

  ‘விமான விபத்தில் எத்தனை பேர் மாய்ந்தார்களோ தெரியவில்லை’
  ‘விளக்கில் விழுந்து மாய்ந்தது விட்டில் பூச்சி’

 • 2

  பேச்சு வழக்கு ஒன்றைப் பற்றிய தனது வியப்பு, குறை போன்றவற்றைத் திரும்பத்திரும்பச் சொல்லி அசந்துபோதல்.

  ‘குறைந்த விலையில் வந்த வீட்டை வாங்காமல் விட்டுவிட்டதைச் சொல்லிச்சொல்லி மாய்ந்தார்’
  ‘‘இந்தக் குழந்தை எவ்வளவு அறிவுடன் பேசுகிறது பார்’ என்று சொல்லிச்சொல்லி மாய்ந்துபோனாள்’

தமிழ் மாய் யின் அர்த்தம்

மாய்

வினைச்சொல்மாய, மாய்ந்து, மாய்க்க, மாய்த்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (உயிரை) போக்குதல்.

  ‘தலைவர் இறந்ததற்காகக் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் தொண்டர்களும் இருக்கிறார்கள்’

 • 2

  உயர் வழக்கு அழித்தல்.

  ‘அணுகுண்டுகள் லட்சக்கணக்கான உயிர்களை மாய்த்துவிடுவதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்குத் தொடரவும் செய்கிறது’