தமிழ் மாயம் யின் அர்த்தம்
மாயம்
பெயர்ச்சொல்
- 1
இல்லாதது இருப்பதாகத் தெரியும் பொய்மை; பொய்த் தோற்றம்.
‘கோடைக் காலத்தில் நாம் காணும் கானல்நீர் ஒரு மாயக் காட்சிதான்’‘‘வாழ்வே மாயம், உலகே மாயம்’ என்று தத்துவம் பேசுகிறான்’ - 2
உண்மைதான் என்று நம்ப முடியாத அளவில் அசாதாரணத் தன்மைகளுடன் நிகழ்வது அல்லது அசாதாரணத் தன்மைகளைக் கொண்டது.
‘விமானம் விண்ணில் மறைந்த மாயம் என்ன?’‘சிறிது நேரத்துக்கு முன் இங்கிருந்த பணம் திடீரென்று எப்படிக் காணாமல் போயிற்று? மாயமாக இருக்கிறதே?’‘கடைசியில் அந்தச் சிறுவன் மந்திரவாதியிடமிருந்து தப்பித்து மாயக் கம்பளத்தில் பறந்து சென்றுவிடுகிறான்’ - 3
(அசாதாரணமான தன்மையில்) மயக்கும் வசீகரம்.
‘என்ன மாயம் செய்தானோ தெரியவில்லை, அவனையே இவள் சுற்றிச்சுற்றி வருகிறாள்’‘அந்த அழகியின் மாய வலையில் விழாதவர் யார்?’