தமிழ் மாய்மாலம் யின் அர்த்தம்

மாய்மாலம்

பெயர்ச்சொல்

 • 1

  பிறர் அனுதாபத்தைப் பெறுவதற்காக உண்மை நிலையை மறைத்துச் செய்யும் பாசாங்கு.

  ‘கண்டித்து ஒரு வார்த்தை சொன்னதற்கு இப்படி அழுது எல்லோர் முன்னிலையிலும் மாய்மாலம் செய்கிறாளே!’

 • 2

  ஏமாற்று வேலை.

  ‘ஊழலற்ற ஆட்சி என்பதெல்லாம் மாய்மாலம்தான்’
  ‘போலிச் சாமியாரின் மாய்மாலங்கள் வெளிப்பட்டன’