தமிழ் மாரடி யின் அர்த்தம்

மாரடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

 • 1

  (சாவு நிகழ்ந்த வீட்டில் பெண்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக) மார்பில் கைகளால் பலக்க அடித்துக்கொள்ளுதல்.

  ‘தாத்தாவின் உடலைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அம்மாவும் சித்திகளும் மாரடித்துக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  (தொல்லை தருவதாகக் கருதும் ஒன்றை அல்லது ஒருவரை வைத்துக்கொண்டு அல்லது விருப்பம் இல்லாத வேலையைச் செய்துகொண்டு) மிகவும் கஷ்டப்படுதல்.

  ‘இந்த ஓட்டை சைக்கிளை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு மாரடிப்பது?’
  ‘‘உன்னோடு மாரடித்தே என் பாதி உயிர் போய்விட்டது’ என்று தம்பியைப் பார்த்து அம்மா திட்டினாள்’