தமிழ் மார்தட்டு யின் அர்த்தம்

மார்தட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

 • 1

  பிறரிடம் இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்றோ பிறர் செய்ய முடியாததைத் தன்னால் செய்ய முடியும் என்றோ மற்றவர் முன்னிலையில் பெருமையுடன் கூறிக்கொள்ளுதல்.

  ‘எங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு என்று மார்தட்டியவர்கள் தேர்தலுக்குப் பின் காணாமல்போய்விட்டார்கள்!’
  ‘தன்னை வெல்ல எவரும் இல்லை என்று மார்தட்டிக்கொண்ட பிரபல குத்துச் சண்டை வீரர் ஒரு இளைஞனிடம் பரிதாபமாகத் தோல்வியடைந்தார்’

 • 2

  ஆரவாரமாகப் பேசுதல்.

  ‘‘வறுமையை ஒழிப்போம்’ என்று அரசியல்வாதிகள் மார்தட்டுகிறார்களே தவிர, வறுமையை ஒழித்த பாடில்லை’