தமிழ் மார்பு யின் அர்த்தம்

மார்பு

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின்) கழுத்துக்குக் கீழாக, வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி; நெஞ்சு.

  ‘விபூதியைக் குழைத்து நெற்றியிலும் மார்பிலும் தோளிலும் பூசிக்கொண்டார்’
  ‘தாத்தா மார்பு வலிக்கிறது என்று படுத்துவிட்டார்’
  ‘கரப்பான் பூச்சியின் மார்பு மூன்று கண்டங்களால் ஆனது’
  ‘மாடப்புறாவின் மார்பிலும் கழுத்திலும் பளபளப்பான நிறங்கள் காணப்படும்’

 • 2

  காண்க: மார்பகம்