தமிழ் மாற்றல் யின் அர்த்தம்

மாற்றல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஆணை பிறப்பிக்கப்பட்டு) ஒரு பணியிடத்திலிருந்து மற்றொரு பணியிடத்துக்கு அல்லது ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்குச் செல்லும் அல்லது செல்ல வைக்கும் நிர்வாக ஏற்பாடு.

  ‘அவருக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது’
  ‘எனக்கு என் சொந்த ஊருக்கே மாற்றல் கிடைக்குமா?’
  ‘அந்த அதிகாரி இப்போதுதான் மாற்றல் வாங்கி இங்கு வந்திருக்கிறார்’
  ‘நம் அலுவலகத்தில் மாற்றல் குறித்த விதிகளைத் திருத்த வேண்டும்’