தமிழ் மாறுபாடு யின் அர்த்தம்

மாறுபாடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மாற்றம்; மாறுதல்.

  ‘முயலுக்குப் புதிய மருந்தைக் கொடுத்து மாறுபாட்டைக் கவனித்துவந்தார்கள்’

 • 2

  வேறுபட்ட தன்மை; வேறுபாடு.

  ‘கருத்தில் நம்மோடு மாறுபாடு உடையவர்களாக இருந்தாலும் நட்புறவோடு இருப்பவர்கள்’
  ‘மாறுபாடான கருத்தாக இருந்தாலும் அவர் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்’