தமிழ் மாற்றம் யின் அர்த்தம்

மாற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப்படும் நிலை.

  ‘உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன’
  ‘வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது’
  ‘நீரின் பௌதிக மாற்றமே பனிக் கட்டி’
  ‘தெருப் பெயர் மாற்றம்’
  ‘ஒரு மாற்றத்துக்காக இந்தத் தடவை நான் ஒரு துப்பறியும் நாவல் எழுதப்போகிறேன்’
  ‘கல்கத்தா நகரம் ‘கொல்கத்தா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது’
  ‘ரசாயன மாற்றம்’
  ‘இந்தச் சட்டத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்து திருத்தியமைக்க உள்ளார்கள்’
  ‘பருவநிலை மாற்றத்தால் பலருக்கும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன’

 • 2

  அருகிவரும் வழக்கு மாற்றல்.