தமிழ் மாலை மரியாதை யின் அர்த்தம்

மாலை மரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை வரவேற்கும்போது) மாலையிடுதல் போன்ற மரியாதை நிமித்தமான சம்பிரதாயங்கள்.

    ‘தங்கள் ஊருக்கு வந்த அமைச்சரை ஊர் மக்கள் மாலை மரியாதையுடன் வரவேற்றனர்’
    ‘மாலை மரியாதையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. உள்ளன்போடு உபசரித்தால் போதும்’
    ‘புதிதாக வந்த மேலதிகாரியை ஊழியர்கள் மாலை மரியாதையுடன் வரவேற்றனர்’