தமிழ் மாவு யின் அர்த்தம்

மாவு

பெயர்ச்சொல்

 • 1

  (அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களைக் காயவைத்து) அரைப்பதால் கிடைக்கும் மெல்லிய தூள்.

  ‘கோதுமை மாவு’
  ‘கடலை மாவு’

 • 2

  (சப்பாத்தி முதலியவை தயாரிக்க) நீர் ஊற்றிப் பிசைந்த கோதுமை முதலியவற்றின் மாவு/(இட்லி, தோசை தயாரிக்க) ஊறவைத்து அரைக்கப்பட்ட அரிசி, உளுந்து முதலியவை.

  ‘பூரிக்காக மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டினாள்’
  ‘தோசை மாவுக்கு உப்புப் போட்டுக் கரைத்து வை’
  ‘வாழைக்காயை நறுக்கிக் கடலை மாவில் முக்கியெடுத்த பிறகு அதை வாணலியில் போட வேண்டும்’
  ‘தோசை மாவு நன்றாகப் பொங்கியிருக்கிறது’