தமிழ் மிகுதி யின் அர்த்தம்

மிகுதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது) அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

  ‘இந்தப் பகுதியில் துணி நெய்வதைத் தொழிலாகக் கொண்ட மக்கள் மிகுதி’
  ‘வலி மிகுதியால் துடித்தாள்’
  ‘எப்போதும் கணக்கில் மட்டும் மிகுதியான மதிப்பெண்கள் வாங்கிவிடுவான்’
  ‘சங்க இலக்கியத்தில் மிகுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களில் நெய்தலும் ஒன்று’
  ‘களைப்பு மிகுதியால் அப்பா தூங்கிப்போனார்’