தமிழ் மிகை யின் அர்த்தம்

மிகை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உண்மையாக அல்லது இயல்பாக உள்ளதைவிட அதிகமாக உள்ள தன்மை.

  ‘குணச்சித்திர நடிகரின் மிகையான நடிப்பு எரிச்சலைத்தான் கிளப்பியது’
  ‘அவனுடைய மிகையான பணிவு எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது’

 • 2

  கூடுதல்; மிகுதி; உபரி.

  ‘தேவைக்கு அதிகமாகப் புரதத்தை உட்கொண்டால் அந்த மிகைப் புரதம் கொழுப்பாக மாற்றப்படுகிறது’
  ‘போக்குவரத்துக் கழகங்களின் மிகை வருமானத்திலிருந்து பேருந்துகள் வாங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்’