தமிழ் மிச்சப்படுத்து யின் அர்த்தம்

மிச்சப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (நேரம், மின்சக்தி, பணம், எரிபொருள் போன்றவற்றைத் தேவையில்லாமல் செலவு செய்வதைத் தவிர்ப்பதன்மூலம்) சேமித்தல்.

  ‘பேருந்தில் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதைவிட ரயிலில் சென்றால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்’
  ‘குளிர் காலத்தில் குறைந்த விலையில் மின்விசிறி வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம்’
  ‘ஒவ்வொரு செலவையும் கவனமாகப் பார்த்துப்பார்த்துச் செய்வதால் என்னால் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது’
  ‘எங்கள் குறிப்பைப் பின்பற்றினால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்’