தமிழ் மிச்சம் யின் அர்த்தம்

மிச்சம்

பெயர்ச்சொல்

 • 1

  (செலவழித்தது, எடுத்தது, கழித்தது, சென்றது போக) எஞ்சியிருப்பது; மீதி.

  ‘காய்கறி வாங்கிய பின் கையில் இரண்டு ரூபாய்தான் மிச்சம் இருந்தது’
  ‘தட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடு’
  ‘வீட்டு வேலையை முடித்துவிட்டு மிச்ச நேரத்தில் அக்கா ஓவியம் வரைவாள்’

 • 2

  (ஒரு வேலையில்) செய்யப்படாமல் இருப்பது; (ஒரு முழுமையில்) விடப்பட்டது; பாக்கி.

  ‘இந்த வேலையை இதோடு நிறுத்திக்கொள்; மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’
  ‘படத்தின் மிச்சத்தையும் வரைந்து முடி!’

 • 3

  ஒரு செயலின் விளைவு ஒருவருக்குப் பிடிக்காததையோ எதிர்பார்த்தபடி இல்லாததையோ அலுப்புடன் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் சொல்.

  ‘சமாதானம் செய்யப்போய் நான் அடிவாங்கியதுதான் மிச்சம்’
  ‘பணத்துக்காக அலைந்ததுதான் மிச்சம்’

தமிழ் மிச்சம் யின் அர்த்தம்

மிச்சம்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நிறைய.

  ‘உங்களைப் பார்த்து மிச்சம் நாளாயிற்றே!’

தமிழ் மிச்சம் யின் அர்த்தம்

மிச்சம்

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ‘மிக’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘மிச்சம் பெரிய வீடு’
  ‘மிச்சம் நல்ல சாப்பாடு’