தமிழ் மிடுக்கு யின் அர்த்தம்

மிடுக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உடல்வாகு காரணமாக அமையும்) தோரணை; கம்பீரம்.

  ‘எங்கள் சித்தப்பா ராணுவ அதிகாரியைப் போன்ற மிடுக்கான தோற்றமும் நடையும் கொண்டவர்’
  ‘மிடுக்காக உடை அணிந்தவர்’

 • 2

  இளமைத் துடிப்பு.

  ‘வாலிப மிடுக்கு’