தமிழ் மித யின் அர்த்தம்

மித

வினைச்சொல்மிதக்க, மிதந்து

 • 1

  (திரவத்தின் மேல் பரப்பில் ஒன்று அல்லது ஒருவர்) மூழ்காமல் இருத்தல் அல்லது கிடத்தல்.

  ‘நீ தண்ணீரில் எவ்வளவு நேரம் மிதப்பாய்?’
  ‘பாலில் ஏதோ மிதக்கிறது பார்!’
  உரு வழக்கு ‘செய்தியைக் கேட்டதும் அவன் இன்ப வெள்ளத்தில் மிதந்தான்’

 • 2

  கீழ் இறங்காமல் (காற்றில் அல்லது விண்வெளியில்) இருத்தல்.

  ‘பறவை இறகு காற்றில் மிதந்து சென்றது’
  உரு வழக்கு ‘அவன் கற்பனையில் மிதந்தான்’