மினுக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மினுக்கு1மினுக்கு2

மினுக்கு1

வினைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒளியால் ஒரு பொருள் பளபளப்பாகத் தெரிதல்; விட்டுவிட்டு ஒளிர்தல்.

  ‘வானில் நட்சத்திரங்கள் மினுக்கிக்கொண்டிருந்தன’
  ‘மரத்தைச் சுற்றி மின்மினிப்பூச்சிகள் மினுக்கிக்கொண்டிருக்கும் அற்புதமான காட்சி’
  ‘அவர் வாய் திறந்து பேசும்போதெல்லாம் தங்கப் பல் மினுக்கியது’

 • 2

  பேச்சு வழக்கு பகட்டுக் காட்டுதல்; ஆடம்பரத்துடன் காட்சி தருதல்.

  ‘‘சாவு வீட்டில்கூடவா நகைகளைப் போட்டுக்கொண்டு இப்படி மினுக்குவது’ என்று பெரியவர் முணுமுணுத்தார்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு இஸ்திரி போடுதல்; தேய்த்தல்.

  ‘இந்த வேட்டியைக் கஞ்சிபோட்டு மினுக்க வேண்டும்’

மினுக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மினுக்கு1மினுக்கு2

மினுக்கு2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பளபளப்பு.

  ‘அவனது முகம் எண்ணெய் மினுக்கோடு இருந்தது’

 • 2

  பேச்சு வழக்கு பகட்டு.

  ‘புதுப் பணக்காரன் என்ற மினுக்கில் திரிந்துகொண்டிருக்கிறான்’