தமிழ் மின் தடை யின் அர்த்தம்

மின் தடை

பெயர்ச்சொல்

 • 1

  தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்றுவிடுதல்.

  ‘நிகழ்ச்சியின்போது சுமார் ஐந்து நிமிடம் மின் தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்’
  ‘இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைக் குறித்துப் புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’

 • 2

  இயற்பியல்
  மின்சாரம் தன் வழியாகப் பாய்வதைத் தடுக்கிற விதத்தில் ஒரு பொருளில் அமைந்திருக்கும் (அளவிடக்கூடிய) தன்மை.