தமிழ் மிரட்டு யின் அர்த்தம்

மிரட்டு

வினைச்சொல்மிரட்ட, மிரட்டி

 • 1

  (தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒன்றை அல்லது ஒருவரை) பயப்பட வைத்தல்; அச்சுறுத்துதல்; எச்சரித்தல்.

  ‘வேலைநிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் கதவடைப்புச் செய்வோம் என்று நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டியது’
  ‘கத்தியைக் காட்டி மிரட்டிப் பயணிகளிடம் கொள்ளையடித்தனர்’
  ‘குழந்தையை ஏன் மிரட்டுகிறாய்?’
  ‘மருத்துவர் நோயாளியை மிரட்டி மாத்திரை சாப்பிடவைத்தார்’