தமிழ் மிளிர் யின் அர்த்தம்

மிளிர்

வினைச்சொல்மிளிர, மிளிர்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒளிர்தல்; பிரகாசித்தல்.

  ‘ஒருசில நட்சத்திரங்கள் மட்டும் மிளிர்ந்துகொண்டிருந்தன’

 • 2

  உயர் வழக்கு (குறிப்பிட்ட இனிமையான தன்மை) சிறப்பாக வெளிப்படுதல்; பளிச்சிடுதல்.

  ‘எப்போதுமே என் மாமா நகைச்சுவை மிளிரப் பேசுவார்’
  ‘அழகு மிளிரும் வர்ணனைகள்’