தமிழ் முக்கியம் யின் அர்த்தம்

முக்கியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒரு நிலைமையின் பல அம்சங்கள், தன்மைகளுள் முதன்மையானது; பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது.

  ‘வகுப்புவாதம்தான் இன்றைய முக்கியப் பிரச்சினை என்று கூறினார்’
  ‘நேற்று அலுவலகத்தில் முக்கியமாக ஏதாவது நடந்ததா?’
  ‘ஏதோ முக்கியமான வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார்’
  ‘உனக்கு நான் முக்கியமா இல்லை அவன் முக்கியமா என்பதை நீயே முடிவுசெய்துகொள்’
  ‘நம் நாட்டின் முக்கிய நகரங்களுள் திருவனந்தபுரமும் ஒன்று’
  ‘நவீன ஓவியத்தைப் பொறுத்தவரை பிக்காசோ மிகவும் முக்கியமான ஓவியராகக் கருதப்படுகிறார்’
  ‘மாமா உன்னிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டுமாம்’