தமிழ் முக்கு யின் அர்த்தம்

முக்கு

வினைச்சொல்முக்க, முக்கி

 • 1

  (எடை அதிகமான பொருளைத் தூக்குதல், தள்ளுதல் போன்ற கடினமான செயல்களைச் செய்வதற்காக) மூச்சைப் பிடித்துக்கொண்டு அதிக அளவில் சக்தியைச் செலுத்துதல்.

  ‘கனமான மேஜையை முக்கிமுக்கித்தான் நகர்த்த முடிந்தது’

 • 2

  பேச்சு வழக்கு ஒன்றைச் செய்வதற்கு மிகவும் சிரமப்படுதல்.

  ‘இந்தக் கணக்குக்கே இப்படி முக்குகிறாய் என்றால் இதை விடப் பெரிய கணக்குகளை எப்படிப் போடுவாய்?’
  ‘எப்படியோ முக்கிமுக்கி இரண்டு பக்கம் கட்டுரை எழுதிவிட்டேன்’

தமிழ் முக்கு யின் அர்த்தம்

முக்கு

வினைச்சொல்முக்க, முக்கி

 • 1

  (ஒன்றை முழுவதுமாக நனையச் செய்வதற்காகத் திரவத்தில்) அமிழச் செய்தல்.

  ‘பஞ்சை வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடு!’
  ‘துணிகளைச் சாயத்தில் முக்கிக்கொண்டிருந்தார்கள்’

தமிழ் முக்கு யின் அர்த்தம்

முக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (சாலை, தெரு முதலியவற்றின்) முனை.

  ‘முக்குக் கடைவரை போய்வருகிறேன்’
  ‘தெரு முக்கில் என்ன கூட்டம்?’