தமிழ் முகத்தில் அடித்தாற்போல் யின் அர்த்தம்

முகத்தில் அடித்தாற்போல்

வினையடை

  • 1

    (மற்றவரிடம் பேசும்போது நயமாகச் சொல்லாமல்) அப்பட்டமாகவும் கடுமையாகவும்.

    ‘பணம் அவசரமாகத் தேவை என்று கடன் கேட்கிறான். எப்படி முகத்தில் அடித்தாற்போல் இல்லையென்று சொல்வது?’
    ‘சில விஷயங்களை முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிடுவதே நல்லது’