தமிழ் முகத்தில் விழி யின் அர்த்தம்

முகத்தில் விழி

வினைச்சொல்விழிக்க, விழித்து

 • 1

  (நல்ல அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படும் ஒருவரின்) உருவத்தை அல்லது முகத்தைக் கண்விழித்ததும் காலையில் பார்த்தல்.

  ‘‘உன் முகத்தில் விழித்துவிட்டுப் போனேன். இன்றைக்கு நல்ல வியாபாரம்’ என்று அம்மாவிடம் சொன்னான்’
  ‘இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன் என்று தெரியவில்லை. காலையிலிருந்து ஒரே கெட்ட செய்தியாக வந்துகொண்டிருக்கிறது’

 • 2

  (ஒருவரைச் சந்திக்கத் தயங்கும் நிலையில் அல்லது தவிர்க்க நினைக்கும் சூழலில்) நேருக்கு நேர் பார்த்தல்.

  ‘கோபத்தில் அவரைக் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டேன். இப்போது எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்று தயக்கமாக இருக்கிறது’
  ‘‘இனி என் முகத்தில் விழிக்காதே’ என்று அப்பா அண்ணனைத் திட்டினார்’
  ‘சொந்தக்காரர்கள் முகத்தில் விழிக்கவே எனக்குப் பிடிக்கவில்லை’