தமிழ் முகத்துக்கு நேரே யின் அர்த்தம்

முகத்துக்கு நேரே

வினையடை

  • 1

    (சம்பந்தப்பட்ட நபரிடம்) நேருக்கு நேராக; நேரடியாக.

    ‘சொத்தைப் பிரித்துக் கொடு என்று முகத்துக்கு நேரே அண்ணனிடம் எப்படிக் கேட்க முடியும்?’
    ‘அவன் நல்லவன் இல்லை என்கிறாய். வீட்டுக்கு வராதே என்று முகத்துக்கு நேரே சொல்லிவிடுவதுதானே?’