தமிழ் முகத்தைத் திருப்பிக்கொள் யின் அர்த்தம்

முகத்தைத் திருப்பிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒருவரை) நேரடியாகப் பார்த்தும் பார்க்காததுபோல் செல்லுதல்; பேசாமல் தவிர்த்தல்; வேண்டுமென்றே புறக்கணித்தல்.

    ‘அவளுக்கு என்ன ஆயிற்று? என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாளே’
    ‘அவரே முகத்தைத் திருப்பிக்கொண்டு போகும்போது, நான் ஏன் போய் வலியப் பேச வேண்டும்?’
    ‘வீட்டுக்கு வந்தவர்களிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது நாகரிகம் இல்லை’