தமிழ் முகத்தை முறி யின் அர்த்தம்

முகத்தை முறி

வினைச்சொல்முறிக்க, முறித்து

  • 1

    (நீண்ட நாட்கள் பழகியவரிடம் கடுமையாக நடந்து கொள்வதன்மூலம்) தொடர்பைத் துண்டித்துக்கொள்ளுதல்.

    ‘இத்தனை வருடம் பழகியதையெல்லாம் மறந்துவிட்டு, முகத்தை முறித்துக்கொண்டு போனால் என்ன அர்த்தம்?’
    ‘சொந்தக்காரர்களிடம் முகத்தை முறித்துப் பேச முடியுமா?’
    ‘அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் சட்டென்று முகத்தை முறித்துக்கொள்வார்’