தமிழ் முகப்பு யின் அர்த்தம்

முகப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (வீடு, கட்டடம் முதலியவற்றின்) வாசலும் வாசலை ஒட்டிய பகுதியும்.

  ‘வீட்டின் முகப்பில் ஒரு புத்தம்புது வெளிநாட்டுக் கார் நின்றிருந்தது’
  ‘பழைய திரையரங்கம் எடுப்பான முகப்பு கொண்டதாகப் புதுப்பிக்கப்பட்டது’

 • 2

  (ஒரு பொருளில்) பார்வைக்கு முதலில் படும்படியாக அமைந்திருக்கும் பகுதி.

  ‘விண்ணப்பிக்கும் பணியின் பெயரை உறையின் மேல் முகப்பில் எழுதவும்!’
  ‘தலைவர் படத்தை லாரியின் முகப்பில் வைத்துக் கட்டியிருந்தார்கள்’
  ‘புத்தகத்தின் முகப்பில் ஆதிமூலத்தின் ஓவியம் இடம்பெற்றிருந்தது’