தமிழ் முகமன் யின் அர்த்தம்

முகமன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒருவரை வரவேற்கும்போது அல்லது சந்திக்கும்போது) நலம் விசாரிக்கும் அல்லது உபசரிக்கும் வகையில் சொல்லப்படுவது.

  ‘விருந்தினர்களை முகமன் கூறி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்’

 • 2

  உயர் வழக்கு (ஒருவரை) புகழ்ந்து கூறும் சொற்கள்; முகஸ்துதி.

  ‘தன்னைப் பற்றி யாராவது முகமன் வார்த்தைகள் கூறினால் அவர் அப்படியே மயங்கிவிடுவார்’

தமிழ் முகமன் யின் அர்த்தம்

முகமன்

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டம், ஒப்பந்தம் போன்றவற்றின்) தொடக்கத்தில் அதன் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றிச் சுருக்கமாக அளிக்கும் முன்னுரை.

  ‘அரசியல் சட்டத்தின் முகமனில் அடிப்படை உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’
  ‘ஒப்பந்தத்தின் நோக்கத்தை அதன் முகமன் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்’