தமிழ் முகம் காட்டு யின் அர்த்தம்

முகம் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

 • 1

  (ஒரு இடத்துக்குச் சென்று) மிகக் குறைந்த நேரமே செலவிடுதல்; தலைகாட்டுதல்.

  ‘பக்கத்து வீட்டுக்காரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். போகிற வழியில் முகம் காட்டிவிட்டுப் போய்விடலாம்’
  ‘எப்போது வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கூடக் குடிக்காமல் முகம் காட்டிவிட்டு ஓடுகிறீர்களே’

 • 2

  (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) (சிறிது நேரமே வரும்) சிறிய வேடத்தில் மட்டுமே தோன்றுதல்.

  ‘நான் ஒன்றிரண்டு படங்களில் முகம் காட்டியிருக்கிறேன்’

தமிழ் முகம் காட்டு யின் அர்த்தம்

முகம் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

 • 1

  எரிச்சலுடன் கடுமையாக நடந்துகொள்ளுதல்; எரிந்து விழுதல்.

  ‘பச்சைக் குழந்தையிடம் போய் முகம் காட்டுகிறாயே’
  ‘அம்மா மேல் கோபம் என்பதற்காக எங்களிடம் முகம் காட்டுகிறீர்களே’
  ‘கடைக்கு வருபவர்களிடம் முகம் காட்டினால் பிறகு யார் வருவார்கள்?’