தமிழ் முகம் கோணு யின் அர்த்தம்

முகம் கோணு

வினைச்சொல்கோண, கோணி

 • 1

  (பெரும்பாலும் எதிர்மறையில்) எரிச்சலையோ அதிருப்தியையோ முகத்தில் வெளிக்காட்டுதல்.

  ‘வீட்டுக்கு வந்த விருந்தினர்களை முகம் கோணாமல் அம்மா உபசரிப்பார்’
  ‘எவ்வளவு பணக் கஷ்டம் இருந்தாலும் படிப்புக்கு என்று பணம் கேட்டால் அப்பா முகம் கோணாமல் தருவார்’

 • 2

  (மற்றவர்) மனம் வருந்துதல்.

  ‘எனக்குக் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களின் முகம் கோணும்படி நான் என்றைக்குமே பேசியதில்லை’