தமிழ் முகம் தொங்கு யின் அர்த்தம்

முகம் தொங்கு

வினைச்சொல்தொங்க, தொங்கி

  • 1

    (அவமானம், ஏமாற்றம் போன்றவற்றால்) முகம் இறுக்கமடைந்து களை இழத்தல்; முகம் செத்துப்போதல்.

    ‘பலூன் வாங்கித் தராததால் குழந்தையின் முகம் தொங்கிப்போய்விட்டது’
    ‘சினிமாவுக்குப் போகக் கூடாது என்று அம்மா சொன்னதும் அவனுக்கு முகம் தொங்கிவிட்டது’
    ‘தட்டில் சோறு குறைவாக இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு முகம் தொங்கிவிட்டது’