தமிழ் முகம் விழு யின் அர்த்தம்

முகம் விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (பெரும்பாலும் வினைமுற்றாக) (ஏமாற்றம், அவமானம் முதலியவற்றால்) முகம் இயல்பான களை இழந்து இறுக்கமடைதல்.

    ‘‘சுற்றுலாவுக்கு நீ போக வேண்டாம்’ என்று அப்பா சொன்னதும் அவன் முகம் விழுந்துவிட்டது’
    ‘‘இருக்கிற இருப்பில் தீபாவளி ஒன்றுதான் குறை’ என்றதும் அவள் முகம் விழுந்துவிட்டது’