தமிழ் முகவரி யின் அர்த்தம்

முகவரி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம், நிறுவனம் போன்றவை இருக்கும்) ஊர், தெருவின் பெயர், கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு; விலாசம்.

 • 2

  மின்னஞ்சல்மூலம் பிறர் தொடர்பு கொள்வதற்காக ஒருவருக்குப் பிரத்தியேகமாக இருக்கும் அல்லது ஒரு இணையதளத்தைத் தொடர்புகொள்வதற்கு உதவும் அடையாள எழுத்துகள், சொல், குறியீடு போன்றவை கொண்ட தொடர்.

  ‘பெரும்பாலான இணையதளங்களில் அவற்றுடன் தொடர்புடைய பிற இணையதளங்களின் முகவரிகளைக் கொடுத்திருப்பார்கள்’
  ‘இந்த அகராதியைப் பற்றிய உங்கள் கருத்துகளை crea@vsnl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்’
  ‘http: www.crea.in என்பது எங்கள் இணையதள முகவரி’