தமிழ் முகாம் யின் அர்த்தம்

முகாம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு குழுவினர் தற்காலிகமாகத் தங்குவதற்காகக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ள இடம்.

  ‘சிகரத்தில் ஏறும்போது விழுந்து அடிபட்டவர் அடிவார முகாமுக்கு எடுத்துச்செல்லப்பட்டார்’
  ‘‘காட்டுயிர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வந்தவர்களின் முகாம் அது’ என்று காட்டினார்’

 • 2

  (போர், தடுப்பு நடவடிக்கை முதலியவற்றுக்குத் தயாராக இருக்கிற வகையில்) ராணுவ வீரர்கள், காவலர் முதலியோர் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடம்; பாசறை.

  ‘தீவிரவாதிகள் இரவு நேரத்தில் ராணுவ முகாம்களைத் தாக்கினார்கள்’

 • 3

  கலவரம், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அகதிகள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படும் இடம்.

  ‘அகதிகள் முகாம்’

 • 4

  குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் ஒரு சேவை, பயிற்சி போன்றவற்றை அளிப்பதற்கான நிகழ்ச்சி.

  ‘இலவசக் கண் சிகிச்சை முகாம் நகராட்சிப் பள்ளிக்கூடத்தில் நடக்கிறது’
  ‘தஞ்சாவூரில் நாளை சாரணர்களுக்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்க உள்ளது’

 • 5

  (ஊர்ஊராகப் போகிறவர்களோ அல்லது பயணத்தில் இருப்பவர்களோ) தற்சமயம் தங்கியிருக்கும் இடம்.

  ‘கடிதத்தில் ‘முகாம், மதுரை’ என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்’

 • 6

  (குறிப்பிட்ட கோட்பாட்டைச் சார்ந்து இயங்கும்) குழு.

  ‘எந்த முகாமிலிருந்து நல்ல படைப்புகள் வந்தாலும் அவர் பாராட்டத் தயங்க மாட்டார்’
  ‘இடதுசாரி முகாமிலிருந்து வந்த எழுத்தாளர்கள் பலர்’