தமிழ் முகாமிடு யின் அர்த்தம்

முகாமிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (முக்கியமான நபர்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் குறிப்பிடப்படும் இடத்தில்) தங்குதல்.

    ‘சுவாமிகள் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார்’
    ‘தலைவர் தில்லியில் முகாமிட்டுக் கூட்டணிகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்’