தமிழ் முடக்கு யின் அர்த்தம்

முடக்கு

வினைச்சொல்முடக்க, முடக்கி

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரை) செயல்படவிடாமல் செய்தல் அல்லது செயலிழக்கச் செய்தல்.

  ‘சிக்கன நடவடிக்கையைக் காரணம் காட்டி வேலைவாய்ப்புத் திட்டங்களை முடக்கிவிடக்கூடாது’
  ‘சாலை மறியல் போராட்டம் போக்குவரத்தை முற்றாக முடக்கிவிட்டது’
  உரு வழக்கு ‘அதிகாரிகளின் கைகள் முடக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம்சாட்டினார்’

 • 2

  (எதிர்பார்த்த அளவுக்குப் பயனில்லாத ஒன்றில் பணத்தை) முதலீடுசெய்தல்.

  ‘உற்பத்தித் திறன் இல்லாத திட்டத்தில் பல கோடி ரூபாயை எங்கள் நிறுவனம் முடக்கிவிட்டது’

 • 3

  (வங்கியில் ஒருவரின் கணக்கில் உள்ள பணத்தை அவர்) பயன்படுத்த முடியாதவாறு தடுத்தல்.

  ‘இரு வங்கிகளில் அவருடைய கணக்கை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’

 • 4

  (ஒருவரின்) நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும் வகையில் ஒடுக்குதல்.

  ‘இவ்வளவு படித்தவளை வீட்டிற்குள் முடக்கிவைப்பது மடமை’