தமிழ் முடங்கு யின் அர்த்தம்

முடங்கு

வினைச்சொல்முடங்க, முடங்கி

 • 1

  (படுத்திருக்கும்போது) கை, கால்களை உடம்புடன் சேர்த்துக்கொண்டிருத்தல்.

  ‘திண்ணையில் தாத்தா குளிரால் முடங்கிக்கிடந்தார்’
  ‘உடல் முழுதும் போர்த்திக்கொண்டு சுருண்டு முடங்கிப் படுத்திருக்கும் மகனை வாஞ்சையுடன் பார்த்தார்’

 • 2

  செயல், திட்டம் போன்றவை தடைப்படுதல்.

  ‘மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் மருத்துவமனைப் பணிகள் முடங்கிவிட்டன’

 • 3

  ஒன்றில் முதலீடுசெய்யப்பட்ட பணம் பலனளிக்காமலும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாமலும் இருத்தல்.

  ‘பணம் முழுவதும் புத்தகம் போட்டதில் முடங்கிவிட்டது’

 • 4

  (ஒருவரின்) நடவடிக்கைகள் குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும் வகையில் ஒடுங்குதல்.

  ‘அப்பா நோயாளியாக வீட்டுக்குள் முடங்கிவிட்டார்’
  ‘பட்டப் படிப்புப் படித்தவள் இன்று சமையல் அறையில் முடங்கிவிட்டாள்’

 • 5

  (கை, கால்) ஊனமாதல் அல்லது செயல் இழத்தல்.

  ‘அவருக்கு அந்த விபத்துக்குப் பின் கால் முடங்கி விட்டது’