தமிழ் முட்டி யின் அர்த்தம்

முட்டி

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு விரல்களை மடக்கினால் மேடாகத் தெரியும் எலும்புப் பகுதி.

 • 2

  முழங்காலில் (மடக்கும் இடத்தில்) உள்ள வட்டமான சில்லு; மூட்டு.

  ‘‘முட்டியைப் பெயர்த்துவிடுவேன்’ என்று பயமுறுத்தினார்’
  ‘கனமான பொருள்களைத் தூக்கினால் இரண்டு முட்டியும் வலிக்கிறது’

 • 3

  காண்க: முஷ்டி

தமிழ் முட்டி யின் அர்த்தம்

முட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் கள், பதனீர் ஆகியவை இறக்குவதற்குப் பயன்படுத்தும்) கலயம்.

  ‘கள்ளு முட்டி’