தமிழ் முட்டிக்கொள் யின் அர்த்தம்

முட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றோ செய்ய வேண்டாம் என்றோ ஆதங்கத்துடனும் அக்கறையுடனும் திருப்பித்திருப்பி) வற்புறுத்திச் சொல்லுதல்.

    ‘இந்த இடத்தில் வீடு வாங்க வேண்டாம் என்று அப்போதே முட்டிக்கொண்டேன். நீதான் கேட்கவில்லை’
    ‘அம்மாவின் உடல்நிலை சரியில்லை, போய்ப் பார்த்துவிட்டு வா என்று முட்டிக்கொண்டேன். நீ கேட்கவில்லை’